தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் யுவராஜ் 40. பவுஞ்சூர் பகுதியில் லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு, பஜார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு மதிய உணவு சாப்பிடச் சென்றார். சாலை அருகே இருந்த மின்கம்பிகள் உரசியதால், லாரியில் இருந்த வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த லாரி டிரைவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார். அணைக்க முடியாததால் லாரி தீப்பற்றுவதை தடுக்க அருகே இருந்தவர்களிடம் அருகே ஏரி எங்கே உள்ளது என கேட்டறிந்து, அருகே இருந்த கடுகுப்பட்டு ஏரியில் லாரியை இறக்கினார்.
பின் அருகே இருந்த பொக்லைன் இயந்திரத்தை வரவைத்து, லாரியில் இருந்து தீப்பற்றிய வைக்கோல் கட்டுகள் ஏரியில் வீசப்பட்டது. லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.