பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இறந்து கிடந்த சடலத்தை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இவர் அமல்ராஜ் (45) அமெரிக்காவிலும் அதன் பிறகு ஆந்திராவிலும் ஆயராக பணியாற்றி இருந்துள்ளார். மதுராந்தகம் அருகே உள்ள அகிலி கிராமம் தான் இவரது சொந்த ஊர். தற்போது சோத்துப்பாக்கம் பகுதியில் குடியிருந்து வருவதாகவும் கிறிஸ்தவ ஆலயத்தில் ஆயராக பணியாற்றி உள்ளார்.
கார் முழுமையாக நான்கு கதவுகளும் அடைக்கப்பட்டு உள்ளே இறந்த நிலையில் காணப்படுவதால் மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து இவர் தானாக இறந்தாரா அல்லது இவரை யாரேனும் கொலை செய்துள்ளார்களா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா என பல கோணங்களில் மதுராந்தகம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.