காஞ்சி: மாணவன் மீது கார் மோதி விபத்து (VIDEO)

திருப்போரூர் அருகே டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த மாணவன் மீது சொகுசு கார் மோதி விபத்து செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் பகுதியில் செயல்பட்டு வரும் டீக்கடையில் விஜய் என்பவர் டீ குடித்துக் கொண்டிருக்கும் திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் மது போதையில் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த விஜய் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சொகுசு காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர்கள் யார் எந்தப் பகுதியை சார்ந்தவர்கள் எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் என்கின்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி