செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தகத் திருவிழா துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு சிஐஎஸ்ஐ அலிசன் மேல்நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு மாவட்ட ஆறாவது புத்தகத் திருவிழா துவங்கியது. புத்தக திருவிழாவை சிறு குறு மற்றும் தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இன்று தொடங்கும் இந்த திருவிழா வருகிற 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 60 புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. 25 அரசு பல்வேறு துறை சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் மாலை வேளைகளில் தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது என்றார். எந்த நகருக்கும் கிடைக்காத ஒரு மிகச் சிறப்பு செங்கல்பட்டு நகருக்கு கிடைத்தது. மிகச்சிறந்த பேச்சாளர்கள், அரசு ஓய்வு பெற்ற பிரதிநிதிகள் இந்த அரங்கில் தினம் தோறும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து உள்ளனர். மேலும் சென்னை அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிக அளவில் புத்தக ஸ்டால்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது பார்க்க முடிகிறது. மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக 100 ரூபாய் டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் டோக்கன் மூலமாகவும் அவர்கள் காசு கொடுத்தும் புத்தகங்களை அதிக அளவில் வாங்கி படிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி