செங்கல்பட்டு: வெறிநாய் கடித்து 4 பேர் காயம்

செங்கல்பட்டு மாவட்டம் சீவாடி கிராமத்தில் நேற்று (பிப்ரவரி 7) காலை, தெரு நாய்களுடன் சண்டையிட்டபடி குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த கருப்பு நிற வெறிநாய் ஒன்று, சாலையில் சென்ற சிவானந்தம் (40), வினோத் (32), அவரது 10 வயது மகள் மற்றும் ஆரோன் (48) ஆகியோரின் கை, கால்களைக் கடித்துவிட்டு தப்பியோடியது. காயமடைந்த நால்வரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கிராம மக்கள் அப்பகுதியில் பதுங்கியுள்ள வெறி நாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி