அதனால், இந்த இயந்திரம் அடிக்கடி பழுதடைவதாக கூறப்படுகிறது. மேலும், பழைய எக்ஸ்-ரே இயந்திரம் என்பதால், சோதனை முடிவுகள் பெற, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் பரிசோதனை மற்றும் எலும்பு முறிவு நோயாளிகள், மதுராந்தகம் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் மருத்துவமனையின் எக்ஸ்-ரே இயந்திரத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்