இது குறித்து விசாரித்த காஞ்சி தாலுகா போலீசார், திருமால்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த கொலையாளிகள் பரத், (20), சிவா, (19), திலீப்குமார், (19), சூர்யா, (19), சுரேஷ், (21), ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களில், பரத், சிவா, திலீப்குமார் ஆகியோர், தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும், வாலாஜாபாத் வெண்குடி அருகே பதுங்கியிருந்த ஜாகீர் உசேன், (25), சுல்தான், (32), ஆகியோரை பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்று தவறி விழுந்த ஜாகீர் உசேனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுல்தானை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கொலையில் கல்லூரி மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்