நேற்று (ஜனவரி 1) காலை வீட்டின் முதல் மாடியின் வெளியே, கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.