தற்போது, ஏரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் நீர்வரத்து கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், காவனூர் புதுச்சேரி செல்லும் சாலையில் உள்ள சிறுபாலம் அருகே, நீர்வரத்து கால்வாய் உடைந்து இருப்பதால், தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. உடைந்து உள்ள கால்வாயை சீரமைக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, உடைந்த நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, தண்ணீர் வீணாகி வருவதை தடுக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது