ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்

குன்றத்துார் அடுத்த, கெருக்கம்பாக்கம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து புதைவட குழாய் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதில், திரு. வி. க. , சாலை, 'பிரேமா வாசம்' ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் அருகே பதிக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகிறது.

சாலையில் தண்ணீர் ஓடுவதால், இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோடையில், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், சேதமடைந்த குழாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி