மேல்மருவத்தூர் காடு பகுதிகளில் கொட்டப்படும் கழிவுநீர்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த செண்டிவாக்கம் காப்புக்காடு பகுதி அருகே, மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் உணவகங்களில் இருந்து சேகரமாகும் கழிவுநீரை கொண்டு செல்லும் வாகனங்கள், காப்புக்காடு அருகே உள்ள தனியார் நிலத்தில் கழிவுநீரை கொட்டிவிடுகின்றன. 

அதனால், காப்புக்காட்டில் உள்ள மான், நரி, முள்ளம்பன்றி, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், கோடைகாலத்தில் தண்ணீர் தேடி அலைவதால், கழிவுநீரை பருகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி