மூத்த குடிமக்கள் இந்த மொபைல் ஆப்பில், மூத்த குடிமக்களுக்கு தேவையான சேவைகள் இடம்பெற்றுள்ளன. அருகில் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள் விவரங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள், மூத்த குடிமக்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மேலும் மூத்த குடிமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்திடும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் மொபைல் போனில், உள்ள பிளே ஸ்டோர் வழியாகவோ அல்லது Seniorcitizen.in இணையதளம் வழியாகவோ பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.