கைத்திறத் தொழில்களில், கைவினைக் கலைஞர்களின் பங்களிப்பு, மேம்பாடு, படைப்பு ஆகியவை கருத்திற்கொண்டு, ஆண்டுதோறும் சிறந்த கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கி கவுரவிக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், நான்கு கிராம் தங்க பதக்கம், 50, 000 ரூபாய் பரிசுத்தொகை, செப்பு பட்டய சான்று ஆகியவற்றை, முதல்வர் ஸ்டாலின் அவரிடம் அளித்தார்.
2023- 24ன் மரச்சிற்பக்கலை பிரிவில், அவருக்கு, இவ்விருது வழங்கி கவுரவித்துள்ளது. விருது தேர்வு போட்டிக்காக, வாயிற்பகுதி துாணாக, யானை, குதிரை, வீரர்கள், பூதகணங்கள் உள்ளிட்டவற்றுடன் செட்டிநாடு பகுதி கலையம்ச சிற்பம் வடித்து, விருது பெற்றுள்ளார்.