ஜெர்மன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். இந்த விமான நிறுவனம், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்தில், சமீப காலமாக ஊதிய உயர்வு கேட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
அதனால் நாடு முழுவதும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரு நாள் மீண்டும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.