பொதுவான வெப்பநிலை, 22 - 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். அந்தந்த விமான நிலையங்களின் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு, 'ஆட்டோமேஷன் சென்சார்' வழியாக வெப்ப நிலை தானாக சீர் செய்யப்படும்.
கோடை காலம் துவங்கியுள்ள நேரத்தில், சென்னை விமான நிலையத்தில் உள்ள அனைத்து முனையங்களிலும், 'ஏசி'யின் செயல்பாடு சரியாக இல்லாமல், பயணியர் புழுக்கத்தில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள், முதியோர் போன்றவர்களுக்கு இந்த நிலை பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
இதுகுறித்து, விமான பயணி ஒருவர் கூறியதாவது:
சென்னை விமான நிலைய முனையங்களில் காத்திருக்கும் நேரங்களில், 'ஏசி' வசதி போதுமானதாக இல்லை. மதிய நேரத்தில்தான் இப்படி இருக்கிறது என்றால், இரவு நேரங்களில் அதைவிட மோசம்.
விமான நிலைய அதிகாரிகள் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது, 'ஏசி'யில் வெப்பநிலை சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். பயணியருக்கு சரியான சேவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.