காஞ்சி: தொல். திருமாவளவன் பேட்டி (VIDEO)

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி விசிக நகர செயலாளர் ஐயப்பன் இல்ல காதணி விழா நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கலந்து கொண்டு குழந்தைகளை ஆசீர்வதித்து வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசமைப்பு சட்டத்தின் உயிர் மூச்சு கோட்பாடான மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த பேரணி ஒருங்கிணைக்கப்படுகிறது என்றும், விடுதலை சிறுத்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இதில் பெருவாரியாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக பேசினார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மதுரையில் கூடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அரசியல் அரங்கில் கவனிக்கப்படுகிறது. நான்காண்டு கால திமுக அரசு அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. எண்ணற்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

தொடர்புடைய செய்தி