எனவே இந்த சாலையை மறுசீரமைத்து புதிய சாலை அமைக்க கோரி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலிப்பாக்கம் அருகே நடைபெறும் சாலை பணியின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்கள் பரனுர் சுங்கச்சாவடியில் இருந்து புலிப்பாக்கம் வரை எதிர் திசையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக புலிப்பாக்கம் முதல் மகேந்திரா சிட்டி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுபோன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஒட்டிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.