இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து சுய உதவிக் குழுக்கள் செய்த உணவினை சுவைத்துப் பார்த்தார். இதில், ஊட்டச்சத்து, உடல்நலன், சுகாதாரம் பேணுதல், குழந்தைகள் மற்றும் பெண்கள் தினசரி உணவில் பயன்படுத்த வேண்டிய உணவு பொருட்கள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. சிறுதானிய உணவுகளை சிறப்பாக செய்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், காட்டாங்குளத்துார் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி