அதன்பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்த வழக்கு, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவி மாலதி ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும், அவரது தந்தை ராமலிங்கம், தாய் அரிவாளநந்தகோமதி ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.