பூண்டி ஏரியை துார் வார கோரிக்கை

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பூண்டி கிராமம். இக்கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.

இந்த ஏரி நீரை பயன்படுத்தி, பூண்டி, ராயமங்கலம், எடர்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில், 150 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பல ஆண்டுகளுக்கு மேலாக, இந்த ஏரி துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், பருவ மழையின் போது, ஏரியில் போதுமான அளவிற்கு நீர் தேங்க வாய்ப்பின்றி, குறைந்த அளவிலான தண்ணீரே சேகரமாகிறது. அதேபோல், ஏரிகரைப் பகுதிகளும் பலவீனமாக உள்ளன.

எனவே, பூண்டி கிராம ஏரியை துார் வாரவும், விவசாய பயன்பாட்டிற்கு சென்று வர கரையை பலப்படுத்தி போக்குவரத்துக்காக அகலப்படுத்தவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி