சென்னை: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தாக்குதல்.. 3 பேர் கைது

சென்னை புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த நவீன் (19) தனது பிறந்த நாளையொட்டி நண்பர்களுடன் மது அருந்தி கேக் வெட்டி கொண்டாடியபோது, கிரேநகர் பவுடர் மில் சாலையில் வழிமறித்து மணிகண்டன் (25), பாலாஜி (24), லோகேஷ் (24) மற்றும் ஒரு சிறுவனை கற்களாலும் கட்டைகளாலும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் நவீன், அச்சு (21), தமிழ் குமரன் (18) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி