காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே கோவூர் ஊராட்சியில், சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 17 மாடுகளை, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவின் பேரில் பிடித்து காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மாடுகளை சாலையில் திரிய விட்டால் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி தலைவர் சுதாகர் தெரிவித்தார்.