வாலாஜாபாத் அருகே 10 வெள்ளாடுகள் திருட்டு

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், (52); இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பண்ணை ஒன்றில், காவலாளியாகவும், தோட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளியாகவும் உள்ளார். ஜெயபால், தன் வெள்ளாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, அங்கேயே பண்ணையில் கொட்டகையில் அடைப்பது வழக்கம்.

இதேபோல, நேற்று முன்தினம் தன்னுடைய 26 வெள்ளாடுகளை, பண்ணை பகுதி கொட்டகையில் அடைத்து வைத்து உறங்கச் சென்றார். வழக்கம்போல, நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது, கொட்டகையில் இருந்த வெள்ளாடுகளில் 10 ஆடுகள் காணாமல் போனதை கண்டார். பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்காததையடுத்து, இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஜெயபால் புகார் அளித்தார். அதன்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி