கனகாம்பரம் பூ விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி, அணைக்கரைப்பட்டி, புள்ளிமான் கோம்பை ஆகிய பகுதிகளில் விவசாயிகள் கனகாம்பரம் பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச., 13) கார்த்திகை தீபத்தை  முன்னிட்டு ஆண்டிபட்டி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ அதிகபட்சமாக ரூ.1,500-க்கு விற்பனையானது. பூக்களின் தேவை அதிகரிப்பால் கொட்டும் மழையிலும் வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி