திருப்பூர் மாவட்டம், சின்னக்காளி பாளையத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள். 107 வயதாகும் இவர் தனது சொந்த வேலைகளை செய்துகொண்டு, ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். அவரது 107வது பிறந்தநாளை கனகாபிஷேக விழாவாக குடும்ப உறுப்பினர்கள் கொண்டாடினர்கள். குடும்பத்தில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் மூதாட்டி பேச்சியம்மாளிடம் ஆசிர்வாதம் வாங்கினர். அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என மூதாட்டி அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்தார்.
நன்றி: News 18 Tamilnadu