மநீம கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரும் நவ.7-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியூர் நிர்வாகிகள் சென்னைக்கு தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகை காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு, நிர்வாகிகள் அனைவரும் அவரவர் தொகுதிகளிலேயே தங்கி மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் மக்கள் பணிகளில் ஈடுபடுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.