இந்திய திரையுலகின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனத்தின் தலைவரும், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவருமான ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் நேற்று (டிச., 04) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மநீம தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், மறைந்த ஏவிஎம் சரவணனின் மகன் எம்.எஸ். குகன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இன்று (டிச., 05) ஆறுதல் தெரிவித்தார்.