குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று (பிப்.4) மதியம் 3:00 மணிக்கு திருவெண்ணைநல்லூர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் வரவில்லை. இதையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து கிராம மக்கள் 4:30 மணிக்கு போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துச் சென்றனர்.