கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, கைலாசநாதர் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள கங்கை அம்மன் கோயிலில் வரும் 6ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கோயிலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வந்தார். அப்போது கோயில் நிர்வாகிகள் மணிகண்டன், ராமதாஸ், பொன்னுசாமி, குமார், வழக்கறிஞர் வெங்கடேசன், முருகன், தண்டபாணி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். இதையடுத்து நீதிபதி தண்டபாணி, சுவாமி தரிசனம் செய்து, கோயில் கோபுரத்திற்கான கலசத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார்.