. பைக்கில் வந்த நபர்களில் ஒருவர், தான் வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கியால், வனத்துறை ஊழியர்களை நோக்கி சுட்டார். அதில், வனக்காப்பாளர் வேல்முருகனின் வலது கால் பாதத்தில் குண்டு பாய்ந்தது. இருப்பினும், வேட்டைக்கு வந்த இருவரையும் பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் மட்டும் சிக்கினார். துப்பாக்கி சூடு நடத்தியவர் தப்பிச் சென்றார். பிடிபட்டவரை விசாரித்ததில், சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் செல்லக்கண்ணு, 43; துப்பாக்கியால் சுட்டவர் பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து செல்லக்கண்ணுவை கீழ்குப்பம் போலீசில் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.
சிறுமியை காட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டல்