தியாகதுருகம் அடுத்த மாடூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (40) என்பவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் அவ்வப்போது மாடூருக்கு வந்து செல்வது வழக்கம். மார்ச் 1 அன்று, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 2 சவரன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.