சங்கராபுரம்: பைக் ஓட்டிய மாணவன் வழக்கு பதிவு செய்த போலீசார்

சங்கராபுரம், கடைவீதி முன்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பிளஸ் 2 மாணவர்கள், 6 பேர் விலை உயர்ந்த பைக்களில், அதிக சத்தத்துடன் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை நிறுத்திப் பிடித்து, ஓட்டிச் சென்ற, 6 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து, உரிய அறிவுரைகளை வழங்கினர். மாணவர்கள் மீது, ஹெல்மெட் அணியாமை, அதிவேகம், 18 வயதுக்குக் கீழ் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் அபராதம் செலுத்தக் கோரி, வாகனங்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி