ரிஷிவந்தியம் சிறுமி மாயம் போலீசார் விசாரணை

ரிஷிவந்தியம் அடுத்த கீழ் பாடி கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தீபிகா(17) கடந்த 27ஆம் தேதி வீட்டில் தூங்கினார். மறுநாள் காலை அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாணவியை கண்டுபிடித்து தரக் கோரி தாய் அம்சள்ளி ரிஷிவந்தியம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி