அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பணியில் சேர்ந்து, 38 மாவட்டங்களிலும் பணிபுரியும் 6,837 காவலர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் ரூ. 23 லட்சத்து 24 ஆயிரத்து 950 நிதி உதவி தொகை பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி நிதி உதவியை இறந்த சின்னதுரையின் தந்தை அர்ஜூனிடம் வழங்கி ஆறுதல் கூறினார். நிதி உதவியாக பெறப்பட்ட பணம் அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது அஞ்சல் மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டது. அப்போது, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு