கள்ளக்குறிச்சி: நகைக்கடையில் ஷட்டரை அறுக்கும் கொள்ளையர்கள்

சின்னசேலம் அருகே நகைக்கடை ஷட்டரை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவதினத்தன்று இரவு நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன் கடையைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் காலை ஷட்டர் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சின்னசேலம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரண்டு நபர்கள் கட்டிங் மெஷின் கொண்டு கடையை உடைக்க முயன்றது பதிவாகியிருந்தது. அதிர்ஷ்டவசமாக நகைகள் எதுவும் திருடுபோகவில்லை என்றும், இது திருட்டு முயற்சி மட்டுமே என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி