கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பான பொது பிரச்னைகள் மற்றும் குடிநீர், பட்டா தொடர்பான ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவையால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை, கண்காணிப்பு பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து உரிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.