க.குறிச்சி: தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழ் மொழிக்காகப் பணியாற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் உள்ள தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வரும் 17ஆம் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி