சின்னசேலம் அருகே பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நல்லதம்பி (35), ஈரியூர் மாங்குளம் சாலையில் பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கீழ் நாரியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காயமடைந்த ஜெயராமன் தப்பியோடியுள்ளார். இது குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.