சின்னசேலம்: லாரி மீது மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே பல்லகச்சேரியில், கரும்பு பாரம் ஏற்றிய லாரி மீது மின்கம்பி உரசியது. இதனை கவனிக்காமல், கரும்பு சுற்றி கட்டப்பட்டிருந்த இரும்பு வட்டத்தை பிடித்து மேலே ஏற முயன்ற விவசாயி வினை தீர்த்தான் மீது மின்னழுத்த கம்பி பாய்ந்து அவர் உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி