கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பிரம்மகுண்டத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருந்த வழிபாட்டு மன்றம், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தாசில்தார் வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது. வழிபாட்டு மன்றத்துடன் சேர்த்து, அதன் அருகே இருந்த கடைகளும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இடித்து தள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டது.