உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது விஷ்ணு(17) என்பவர் வைத்திருந்த பேனரில் அவதூறான வாசகங்கள் இருந்ததால், சிலர் அதை அழித்து கண்டித்தனர். இதனால் மனமுடைந்த விஷ்ணு, வீட்டின் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.