இப்பள்ளியில் பயின்ற 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்று, பல்வேறு மருத்துவ கல்லுாரிகளில் எம். பி. பி. எஸ். , மற்றும் பி. டி. எஸ். , உள்ளிட்ட இளநிலை மருத்துவ வகுப்பில் சேர்ந்து படிக்கின்றனர்.
நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. அதில், மாணவர் லிங்கராஜா 645 மதிப்பெண்ணும், மாணவிகள் அக் ஷயபாரதி 622, இன்சுவை 607 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் பரத்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்ஸி ஆகியோர் மாணவிகளை பாராட்டி, பரிசு வழங்கி கவுரவித்தனர்.