கள்ளக்குறிச்சி பெருமாள் கோயில் தெருவில் ஜிஎஸ்டி அலுவலகம் நடத்தி வரும் ராஜேந்திரன்(68) பிப்ரவரி 20 மதியம் உணவுக்காக அலுவலகத்தை மூடிவிட்டு சென்றார். திரும்ப வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 42,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.