கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அன்பழகன் (43) தனது மனைவி, மகள் மற்றும் உறவினருடன் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் தனியார் பள்ளி அருகில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி