உளுந்தூர்பேட்டை அடுத்த புகைப்பட்டி அருகே வேகத்தடையை மீறி வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காரில் இருந்த மோகுல் தப்பி ஓடிவிட்ட நிலையில், எலவனாசூர் கோட்டை போலீசார் காரை சோதனையிட்டபோது, 32 குட்கா மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தியதாக வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.