கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 24ம் தேதி மதியம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஈயனுார் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சந்தோஷ்குமார், 20; சிறுமியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் சந்தோஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.