உளுந்தூர்பேட்டை: 3 கார்கள் மோதல்.. 10 பேர் படுகாயம்

கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் லோகித், 52; மின் வாரிய பொறியாளர். இவர், மனைவி மற்றும் குழந்தையுடன் பெங்களூருவில் இருந்து கும்பகோணத்திற்கு காரில் சென்றார்.

நேற்று மதியம் 12: 00 மணியளவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், சாலையை குறுக்கே கடந்து செல்ல முயன்றார். அப்போது, லோகித் ஓட்டிச்சென்ற மாருதி ஸ்விப்ட் கார், கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரான ஜான் ராபர்ட் தாஸ், 64; என்பவர் ஓட்டி வந்த ஹூண்டாய் ஐ10 கார் மீது மோதிவிட்டு, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கார்த்திக் பிரபு, 45; ஓட்டி வந்த மாருதி ஸ்விப்ட் கார் மீதும் மோதியது.

இதில், காயமடைந்த லோகித், கார்த்திக் பிரபு, அவரது மனைவி ஆர்த்தி, 38; ஜான் ராபர்ட் தாஸ் உட்பட 3 கார்களிலும் வந்த 10 பேர் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

எடைக்கல் போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி