உளுந்தூர்பேட்டை: சிறுமிகளிடம் சில்மிஷம்.. 2 பேரிடம் விசாரணை

உளுந்துார்பேட்டை அருகே பள்ளி சிறுமிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உளுந்துார்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (57); இவர் சில வாரங்களுக்கு முன், 5ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதேபோல, சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்த முகமதுயாகூப் (58) என்பவர் 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி