சங்கராபுரத்தில் டிராக்டர் திருட்டு

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் முத்தரசன் என்பவர் தனது டிராக்டரை கடந்த 10ம் தேதி விவசாய நிலத்தில் நிறுத்தி வைத்தார். மறுநாள் காலை டிராக்டர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி