கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கமலக்கண்ணன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மனைவி ஏழு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், இவர்களது நான்கு குழந்தைகளான லாவண்யா (16), ரீனா (14), ரிஷிகா (12) மற்றும் அபினேஷ் (9) ஆகியோர் ஆதரவின்றி தவித்தனர். கிராம மக்கள் தந்தையின் உடலை அடக்கம் செய்ய நிதி உதவி அளித்தனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளிடம் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறினார். அரசின் சார்பில் வீடு மற்றும் வேலை வாய்ப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.